திருவண்ணாமலை குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!!


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாய பாசனத்திற்காக 03/03/26/ முதல் 31/03/26 வரை வினாடிக்கு 240 கன அடி வீதம் 28 நாட்களுக்கு ஒரே தவணையாக 580.80 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் க.தர்பகராஜ்  அவர்கள் குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் 47 ஏரிகள் நிரம்பி சுமார் 9432.76 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பயன் பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!