புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற தொல்லியல் மரபு மன்றம் - வரலாற்றுத்துறை பயிற்சி பட்டறை !!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி) -இல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதி உதவியுடன் கல்லூரி கல்வித்துறை வழிகாட்டுதலில் தொல்லியல் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் என்னும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தஞ்சை மண்டல தொழிற்நுட்ப அலுவலர் T. தங்கதுரை சிறப்பு பயிற்றுநராக கலந்து கொண்டு முதுகலை வரலாறு மற்றும் முதுகலை தமிழ் மாணவர்களை பயிற்றுவித்தார். 

பொற்பனைக்கோட்டை, கீழடி, சிவகலை ஆகிய ஊர்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளை எடுத்துக்காட்டு உரையாற்றினார் தங்கதுரை. தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்களை எடுத்துக்காட்டி எகிப்து வரை கிடைத்துள்ள பிராமி எழுத்துக்களை சுட்டிக்காட்டி நீண்ட உரை நிகழ்த்தினார். தொல்லியல் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மாணவர்களை பயிற்றுவித்தார். தொல்லியல் பொருட்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் தொழில்நுட்ப கருத்துக்களை எடுத்து கூறி பயிற்றுவித்தது சிறப்பாக இருந்தது. மேலும் வெளிவராத தொல்லியல் சின்னங்கள் ஏராளமாகபுதுக்கோட்டை மாவட்டத்தில் புதையுண்டு கிடைக்கின்றன. அவற்றை கண்டறிந்து பதிவு செய்ய பயிற்சி பெரும் தொல்லியல் மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார் தொல்லியல் அலுவலர் தங்கதுரை.

கல்லூரி முதல்வர் முனைவர் பா. புவனேஸ்வரி அவர்கள் தலைமை உரை ஆற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் நினைவு சின்னங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன. அவற்றை பிற மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். நம் கல்லூரி வரலாற்று துறை மாணவர்களை மாவட்டத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பார்வையிட வரலாறு துறை ஆசிரியர்கள் அனைத்து செல்ல வேண்டும் என்று கல்லூரி முதல்வர் வலியுறுத்தி பேசினார்.. வரலாற்று துறை தலைவர் முனைவர் மு. பற்குணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவை அ.சகாதேவன் தொகுத்து வழங்கினார். அ.சந்திரபோஸ் நன்றி வழங்க விழா இனிதுடன் நிறைவேறியது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!