அமமுக வில் இருந்து விலகிய மாவட்ட சார்பு அணி நிர்வாகி, குடியாத்தம் தொகுதியில் போட்டியிட அ இ பு த ம மு கழகத்தில் விருப்ப மனு!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் தொகுதி பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த மாஸ்டர் N. கண்ணபிரான் தீவிர புரட்சி தலைவர் ரசிகர். அமமுக கட்சி தொடங்கும் நாளுக்கு முன்னரே, கழகத்தின் முழு நேர விசுவாசியாக இருந்து, தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக கழக. it wing ஐ வலுப்படுத்த மாவட்ட பொறுப்பில் இருந்து தீவிர பணியாற்றி வந்தவர்
இவருடைய தீவிர பணியை கண்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் தொகுதி பொறுப்பாளராக TTV தினகரனால் பணியமர்த்தப்பட்டார். தற்பொழுது அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் எடபாடியுடன் இணைந்தது NDA கூட்டணிக்கு சென்ற நிலையில், புரட்சிதாய் சின்னம்மா அவர்களால் தொடங்கி வழிநடத்தப்படும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்தார்
மேலும் நேற்றைய தினம் போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் சின்னம்மாவின் கட்சியின் சார்பாக குடியாத்தம் சட்டமன்ற தனித்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
அடப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி குடும்பத்தில் இருந்து வந்த கண்ணபிரான், புரட்சி தலைவர் கழக செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். வரும் தேர்தலில் சின்னம்மா சுற்று பயணம் வரும் போது நூற்றுக்கணக்கான புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ன் ஆதரவாளர்களை கழகத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக