அரக்கோணம் நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்திப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது இந்த தேர்தலில் பங்கேற்று வாக்களிக்க 300 க்கும் மேற்பட்ட அரக்கோணத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் சார்பிலும் அமைப்புகளின் சார்பிலும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் இதே போல் அதிமுக வேட்பாளரும் வழக்கறிஞருமான சு.ரவி மற்றும் பாமக மாவட்ட செயலாளரும் சோளிங்க சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான வழக்கறிஞர் சரவணன் வாக்களிக்க வந்திருந்தார் இருவரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர் மேலும் வாக்கு சேகரித்துக் கொண்டனர் முன்னதாக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வழக்கறிஞர்கள் பாமக அரி, அதிமுக ஆறுமுகம் வினோத்குமார், தக்கோலம் சுதாகர் இலுப்பை தாண்டலம் மனோகர் திருமலை, விஜி உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக