குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் பெண்கள் முன்னேற்றக் குழுவின் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான பொது சுகாதாரம் மற்றும் மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் . ஆலைக் கல்லூரியில். பெண்கள் முன்னேற்றக் குழுவின் சார்பில் பெண்களுக்கான பொது சுகாதாரம் மற்றும் மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வேலூர் மாவட்ட ஆய்வாளரான எ.லலிதா அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புறை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி வளாகத்தில் மாணவர் உதவி மையம் திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர். ஜெ. எபெனேசர் அவர்கள் இவ்வுதவி மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லூரியில் மாணவிகள் பெண் பேராசிரியர்கள் மற்றும் பெண் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் இணைந்து உலக மகளிர் தின விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர். முப்பெரும் விழாவாக நடைப்பெற்ற இவ்விழாக்களில் முதல்வர் முனைவர். ஜெ. எபெனேசர் அவர்கள் தலைமை ஏற்க கணிதத்துறைத் துறை தலைவர் முனைவர். செ. கருணாநிதி  வாழ்த்துறை வழங்கினார். விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். விழாவினை பெண்கள் முன்னேற்றக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!