கடலில் மீன் பிடிக்க நாட்டுப்படகில் சென்ற மீனவர் படகு கவிழ்ந்து விழுந்ததில் பலி!அவருடன் மீன்பிடிக்கச் சென்ற மகன் உயிருடன் நீந்தி வந்ததால் பரபரப்பு!!...

உள்படம் :

கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர். குப்பு ராஜா.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மணமேல்குடி தாலுகா,தெற்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்  குப்புராஜ்(58).இவரது மகன் ராமநாதன்(20).இவர்கள் இருவரும் நேற்று 18.03.26-ஆம் தேதி மாலை 07.00 மணி அளவில் தெற்கு புதுக்குடி நாட்டுப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து தங்கள் நாட்டுப்படகின் மூலம்  மீன் பிடிக்க சென்ற நிலையில் இன்று அதிகாலை 01மணி அளவில் கடற்கரையில் இருந்து மூன்று நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அதிவேக காற்று மற்றும் உயரமான அலையின் காரணமாக படகு கவிழ்ந்துள்ளது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மீனவர் குப்பு ராஜா மற்றும் அவரது மகன் ராமநாதன் ஆகியோர் கடலில் தத்தளித்த நிலையில் ராமநாதன் மட்டும் நீந்தி கரைக்கு வந்ததாக  கூறப்படுகிறது.மேலும் கடலில் தத்தளித்த குப்புராஜை  காணவில்லை என தகவல் தெரிவித்த நிலையில் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ஆகியோர் சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக  தேடி வந்த நிலையில் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திற்கு அருகே குப்புராஜ் சடலமாக மிதந்துள்ளார் என்ற தகவல் தெரிந்து உடலை கடலோர காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கரைக்கு  வந்த ராமநாதனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்கள் உயிரிழந்த குப்புராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் கடற்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!