திமுக கூட்டணி காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

சடடமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க., கூட்டணியில் தொடர்வதா அல்லது த.வெ.க., உடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனை.

தொகுதி பங்கீடு தொடர்பான முடிவை அறிவிக்க தி.மு.க.,வுக்கு இன்று இரவு வரை காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளதாக தகவல்.

காங்கிரஸ் 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, இரண்டு ராஜ்யசபா பதவிகள் மற்றும் உள்ளாட்சி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 

ஆனால், 25 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா பதவி மட்டுமே வழங்க முடியும் என தி.மு.க., தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மையோர் த.வெ.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்து கேட்டு ராகுல் காந்திக்கு அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க., இன்று முடிவு தெரிவிக்காவிட்டால் காங்கிரஸ் — த.வெ.க., கூட்டணி அறிவிப்பு இன்று  அல்லது நாளை வெளியாக கூடும்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!