சமூக நல்லிணக்கத்திற்காக கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறப்பு நிகழ்ச்சி.கிராமத்தில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் ஏம்ப கோட்டை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.புனித ரமலான் வர இருப்பதை முன்னிட்டு அவர்கள் அனைவரும் நோன்பு இருந்து வரும் நிலையில் மீமிசல் கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் சமூக நல்லிணத்தை பேணும் விதமாக ல்தாருஸ்தலாம் பள்ளிவாசலில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இந்து,முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஆகியோர் வருகை தந்து இஸ்லாமிய பெருமக்களின் நோன்புக்கு விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினர். மேலும் தங்கள் பகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னாள் மக்கள் பிரதிநிதிகளான முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டது கூடுதல் சிறப்பாக பேசப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக