மதுரையில் ரமலான் கொண்டாட்டம்!!
மதுரை மாவட்டம்,புனித ரமலான் மாதத்தின் ஒரு பகுதியாக, மதுரை டவுண் ஹால் ரோட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி வாசலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் திரண்டு ரமலான் காலச் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். நோன்புக் காலத்தின் புனிதத்தைப் போற்றும் வகையில், அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து மசூதியில் ஒன்று கூடி, உலக அமைதி மற்றும் சகோதரத்து
வத்திற்காகச் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பள்ளி வாசல் வளாகத்தில், தொழுகை முடிந்த பிறகு ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வு மதுரையில் பாரம்பரியக் கலாச்சாரத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக