பேர்ணாம்பட்டில் வீட்டின் பின்புறம் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை! ஒருவர் கைது!!
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ஒரு நபர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, போலீஸார் அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 25 மது பாக்கெட்டுகளை (Karnataka Rum Pouches) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சுரேஷ் (53) என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த மது பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக