நெமிலி நெல் கொள்முதல் நிலையம் மழையில் முழ்கியது!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் அசநெல்லிக்குப்பம் கிராமம் உள்ளது இங்கு நெல் கொள்முதல் நிலையம் மூன்று நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. குட்டை பொறம்போக்கு இடத்தில் அமைக்கப்பட்டு திறந்தவெளியில் செயல்படவும் தொடங்கி தாக கூறபடுகிறது இந்த நிலையில் அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டாம் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் எதிர்ப்பையும் மீறி இங்கு அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியதால் திடிரென இரவு பெய்த மழையில் பல நூறு மூட்டைகள் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்கள் இருந்தும் அதிகாரிகளின் மெத்தன போக்கால் இந்த தவறு நடந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் வருங்காலத்தில் இந்த இடத்தில் கொள்முதல் நிலையம் அமைக்க கூடாது என பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக