திருமயத்தில் அமைச்சர். ரகுபதி கோட்டை பைரவரை வழிபட்டார்!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர். ரகுபதி அறிவிக்கப்பட்டு  முதல்வரிடம் வாழ்த்துப்பெற்று திரும்பினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். புதுக்கோட்டையில் இருந்து திருமயம் சென்ற ரகுபதிக்கு நமணசமுத்திரம் கடைவீதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட அதனைத் தொடர்ந்து திருமயம் கோட்டை காலபைரவர் முன்பு சிறப்பு வழிபாடு நடத்தினார் வழிபாடு முடிந்தவுடன் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் ரகுபதி திருமயம் கோடையில் உள்ளசிவன் கோவில்

பெருமாள் கோயில்களில்  வழிபாடு செய்தார்.பின்னர் அவர் ஸ்டேட் பாங்க்  ரோடில்.இருந்து திமுக அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். வழி நெடுக தொண்டர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் 

  முன்னாள் காங்.எம்எல்ஏ ராம.சுப்புராம், திமுக ஒன்றிய செயலர்கள் சிதம்பரம்,கணேசன்,ராமலிங்கம், வட்டார காங் தலைவர்கள் முருகேசன்,கணேசன் மேலூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம் வழக்கறிஞர்கள் பி.ஆர்.அசோக், அறிவுடைநம்பி, திருக்கோகர்ணம் செந்தில் வாகைசேகர், கருணாநிதி மற்றும்திமுக பொருளாளர் வேங்கையரசன்,பேரையூர் பாலு, குல மங்கலம் பழனிவேலு,சிபிஐ எம் ஜீவானந்தம், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்  கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!