பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் வஜ்ரம் தொழிற்சாலையால் மக்கள் அவதி!!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள. மக்கள் பிரதிநிதிக்கு சொந்தமான 9. வஜ்ரம் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் தொழிற்சாலை இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருக்கும் மீன்கள் இறந்து விடுகிறது இப்பகுதியில் கடும் துர்நாற்றம் கண். எரிச்சல் போன்றவர்களால் பொதுமக்கள் பாதிப்படைகிறார்கள்.
ரசாயன கலந்த கழிவு . நீர் ஏரிகள் கலப்பதால் அருகில் உள்ள பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்துவதால் சுகாதாரத் சீர்கேடுகள் ஆஸ்துமா போன்ற வியாதிகள் வர வாய்ப்புள்ளது மேலும் தண்ணீரை பருகும் கால்நடைகளும் பாதிப்படுகிறது.
இதைக் குறித்து பொதுமக்கள் கேட்டால் வஜ்ரம் தொழிற்சாலை உரிமையாளர் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்படி இடத்தை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக