எச்சில் பொறுக்கி சித்தர் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சாமி சித்தர்!!
சிவகங்கை மாவட்டம்,ஆறுமுகம் சாமி சித்தர் காரைக்குடி தாலுகா கோட்டையூரில் அழகாபுரி என்னும் இடத்தில் ஜீவசமாதி ஆகிய சித்தர் எச்சில் பொறுக்கி சித்தர் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் பெயர் காரணம் பக்தர்கள் உண்ணும் உணவில் மிச்சத்தை உண்பதன் மூலம் அவர்களின் கர்மவினைகளை தான் எடுத்துக்கொண்டு பக்தர்களை நல்வாழ்வுக்கு வழிகாட்டி பல மகிமைகள் செய்தார் கோட்டையூரில் மட்டுமின்றி ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையிலும், தென்காசியிலும் இவரது
திருக்கோவில்கள் அமைந்துள்ளது. வாலாஜாபேட்டை பஸ் நிலையத்திற்கு பின்புறம் இவரது கோயில் உள்ளது. தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் மற்றொரு கோயில் உள்ளது. கோட்டையூரில் உள்ள இவரது ஜீவசமாதியில் பக்தர்கள் தியானம் செய்து வழிபடுகின்றனர். திருச்சி- மதுரை சாலையில் உள்ள விராலிமலை பகுதியில் தெற்கு மலை அடிவாரத்தில் ஒரு குகையில் வாழ்ந்து வந்தார். அங்கு வேல் அமைப்பு வழிபட்டு வந்தார் இவர் தன் எட்டாம் வயதில் வாராஹி அம்மன் உடலில் குடிகொண்டதால் அவர் வாக்கு பலித்தது பக்தர்கள் இவருக்கு உணவு கொண்டு வந்து வாழை இலையில் தருவார்கள் அப்போது உணவை உண்டு விட்டு இலையை மடித்து பத்திரமாக வைத்துக் கொள்வார் அதோடு குகையில் ஒரு பகுதியில் வாழை இலையை மடித்து வைத்திருப்பார் சில சமயங்களில் கொடுக்கும் உணவை அந்த குகையில் வாரி இறைப்பார்
ஒரு சமயம் ஒரு பக்தர் தன் கர்மவினையால் மிகவும் அவதிப்பட்டு துன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது நிறைய பரிகாரங்கள் செய்து பார்த்தும் பலன் இல்லை அப்போது நாடி ஜோதிடம் பார்த்தபோது ஓலைச்சுவடியில் கர்ம வினைகளை வாங்கும் சித்தராகிய ஆறுமுகசாமி சித்தர் பற்றி குறிப்பு இருந்தது அதை தெரிவித்து அவரிடம் சென்று உங்களுடைய கர்மவினைகளை போக்கிக் கொள்ளுங்கள் என்று அந்த நாடி ஜோதிடர் வழி சொன்னார் இந்த பக்தரும் தன் குடும்பத்தாருடன் அங்கு சென்று அந்த சித்தரை வழிபட்டு அதன் பின் வாழ்க்கையில் பல முன்னேற்றம் அடைந்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தார்
மற்றொரு பக்தர் அவரை சந்திக்க சென்ற போது கர்ம வினைகள் அவரிடம் செல்வதற்கு அறிகுறியாக அவர் காதில் திடீரென சீல் வடிந்தது அங்கு இருந்த அனைவரும் அதை கண்டு திகைத்தனர் சித்தர் அவர்களிடம் கர்மவினைகள் அவனை விட்டு வெளியேறுகிறது என்று சொல்லி அனைவருக்கும் புரிய வைத்தார் அவருடைய அற்புதங்கள் பல சொல்லிக் கொண்டே போகலாம் அவர் வீதியில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு சிறுவன் அழுது கொண்டு வந்தான் அப்பொழுது அங்கு ஒரு கடைக்காரர் ஏன் அழுகிறாய் என்று கேட்கும்போது தன்னுடைய பள்ளியில் சுற்றுலா செல்ல 12 ரூபாய்க்கு கேட்கிறார்கள் என்னிடம் பணம் இல்லை என்று அழுதான் அப்போது அந்த கடைக்காரர் விளையாட்டாக அங்கே பார் ஆறுமுகசாமி சித்தர் சென்று கொண்டிருந்தார் அவரிடம் கேள் என்று சொன்னதும் எதிரே உள்ள துணிக்கடையில் இருந்து ஒரு அட்டைப்பெட்டி வந்து வாசலில் விழுந்தது அதை எடுத்து சித்தர் சில செய்கைகளை செய்து அந்த அட்டை பெட்டியை அந்த சிறுவனிடம் கொடுத்தார் அந்த சிறுவன் வாங்க மறுத்தான் ஆனால் அந்த கடைக்காரர் நீ வாங்கிக் கொள்ள சித்தர் கொடுக்கும்போது அதை ஏற்க வேண்டும் என்று வாங்கிக் கொள்ள சொல்லும் போது அந்த பெட்டியை திறந்து பார்க்கும் பொழுது ஒரு அழுக்கு பத்து ரூபாய் நோட்டும் ஒரு ₹2 காயினும் அதிலிருந்து அங்கிருந்து அனைவருக்கும் மிக ஆச்சரியமாக இருந்தது
அதேபோல் ஒரு அம்மா தன் வீட்டில் வாசலில் உட்கார்ந்து இருந்தார் அப்போது அந்த வழியாக சென்ற ஆறுமுகம் சாமி சித்தரை பார்த்து இவர் சாக்கடை நீரில் குளித்தார் எனவே இவர் மீது கண்டிப்பாக சாக்கடை வாடை அடிக்கும் என்று நினைத்தார் அப்பொழுது அதேபோல் அவர் மீது சாக்கடை வாடை அடித்தது சிறிது நேரத்திலேயே அவர் மீது மல்லிகை பூக்கள் ரோஜா பூக்கள் மனம் வீசியது தன் தவறை விழுந்த அந்த அம்மா மன்னிப்பு கேட்டார் அவருக்கு சிறிது உணவு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் அந்த உணவை ஒரு வாய் மட்டும் உண்டு விட்டு தெருவில் போன பசுb மாட்டுக்கு அதை கொடுத்து விட்டார் பிறகு ஒரு வாழைப்பழத்தை கொண்டு வந்து கொடுத்தார் அதை வாங்கி அந்த சித்தர் சாப்பிட்டு விட்டு வேணுமாம் என்று மட்டும் சொன்னார் வேறு பழம் இல்லையே சாமி என்று சொன்னதும் உன்னுடைய பூஜை அறையில் ஒரு பழம் இருக்கும் வேணுமாம் என்று சொல்லி அதை எடுத்து வரச் சொன்னார் அந்த அம்மா பூஜை அறையை போய் பார்க்கும்போது அங்கே ஒரு பழம் இருந்தது அவருக்கு மெய் சிலிர்த்தது பிறகு அதை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார்
அந்த ஊரில் போலீஸ்காரரிடம்
சித்தர் போய் நின்றார் அப்பொழுது அந்த போலீஸ்காரர் சித்தருக்கு தேநீர் வாங்கி கொடுத்தார் அதன் பிறகு 12 தடவை வேணுமாம் என்று கேட்டு தேநீர் வாங்கி அருந்தினார். போதும் என்றவுடன் போதுமாம் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுவார். இதேபோல் ஒரு நாள் ரோட்டில் சென்று கொண்டிருந்த காருக்கு இடையில் சித்தர் வந்து விட்டார் அப்பொழுது அந்த கார் டிரைவர் அவரை திட்டியதால் திரும்ப அந்த காரை இயக்க முடியவில்லை அங்கு இருந்த அனைவரும் அந்த சித்தரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றதும் அந்த காரில் இருந்து வந்த வயதான தம்பதி மன்னிப்பு கேட்டதின் பேரில் அந்த காரை தன் கையால் தட்டிச் சென்றார் அப்பொழுது அந்த கார் மறுபடியும் இயங்க ஆரம்பித்தது அங்கு இருந்த அனைவரும் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த நிகழ்வை பார்த்தனர் இவ்வாறு தன் வாழ்வில் பல அற்புதங்களையும் கஷ்டம் என்று வரும் பக்தர்களுக்கு கர்மாவை தான் வாங்கிக்கொண்டு நல்வாழ்வு அளித்தார்
ஆறுமுகசாமி சித்தர் தன் சீடர்களிடம் வைகாசி மாதம் ஜீவசமாதி அடைவதாக முன்னரே தெரிவித்திருந்தார் அதேபோல் 18 5 1981இல் வைகாசி விசாகத்தன்று ஜீவசமாதி அடைந்தார்
அவருக்கு அபிஷேகங்கள் செய்து ஊர்வலமாக அவருடைய உடலை எடுத்து வந்து குறிப்பிடப்பட்ட இடத்தில் வைத்து ஜீவசமாதி செய்தனர் சித்தர்கள் சமாதி நிலை அடையும் பொழுது அந்த குழியில் விபூதி வில்வம் பூக்கள் ஆகியவற்றால் நிரப்பி சமாதி செய்வர்.
என்றும் பக்தர்கள் தடை குறைகளையும் திருமண தடை வேலை மற்றும் அனைத்து கஷ்டங்களையும் அங்கு சென்று அந்த சமாதியில் கூறி வழிபடும் போது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து வாழ்வு சிறக்க அருள் பாலிக்கிறார் ஆறுமுகசாமி சித்தர்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக