ஊராளிபட்டியில் நடைபெற்ற பெரிய கருப்பு சுவாமி கோயில் குடமுழுக்கு விழா !!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ஊராளிபட்டியில் பெரிய கருப்பு சுவாமி கோயில் நத்தம் அருகேயுள்ள ஊராளிபட்டியில்பெரிய கருப்பு சுவாமி கோயில் குடமுழுக்கு விழா  விழா நடந்தது. 

இதையொட்டி வியாழன்கிழமை  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. மாலை முதற்கால யாகபூஜையும் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த கங்கை, காவிரி, அழகர்கோவில் உள்ளிட்ட புனிதஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலை சுற்றி வந்து உச்சியைச் சென்றடைந்தது. அங்கு வேத மந்திரங்கள் ஒத புனித நீர் விமானத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக பூஜை மலர்களும் புனித நீரும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானம் நடந்தது. இதில் எட்டையம்பட்டி, காத்தாம்பட்டி, ஏரக்காபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊராளி பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!