கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்"நம்ம ஊரு நம்ம பள்ளி" என்ற தலைப்பில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 180 மாணவர்கள் ஒன்றிணைந்து 60 அறிவியல் படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தி சிறப்பித்துள்ளார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. 

அறிவியல் கண்காட்சி நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்  சிகரம் சதீஷ் குமார்  வருகை தந்து மாணவிகள் உருவாக்கிய 

அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு மாணவிகளுக்கு அறிவியல் படைப்புகளில் சிறந்த படைப்புகளுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு கேடயம், பதக்கங்களை வழங்கி  மாணவிகள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் நானும் இந்த கீரமங்கலம் பள்ளியில் படித்து சிறந்த கல்வியைப் பெற்று நின்று கொண்டிருப்பதைப் போல நீங்களும் இங்கு படித்து மிகச் சிறந்த மாணவர்களாக உருவாக்கலாம், உங்களது அறிவியல் கண்டுபிடிப்பு திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சிறப்பான பேச்சுரையை நிகழ்த்தி சிறப்பித்தார். 

அறிவியல் படைப்புகளுக்கான பயிற்சிகளை  பாலமுருகன், ஐஸ்வரன் ஆகியோர்  மிகச் சிறப்பாக சிறந்த படைப்புகளை மாணவர்கள் உருவாக்குவதற்கு வழிவகை செய்து சிறப்பித்தனர்.

நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இரா.திவாகர் திட்ட அலுவலர், டிஜிட்டல் ஈகுவலைசர் அமெரிக்கா இந்தியா பவுண்டேசன்  மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து தலைமை தாங்கிய அனைவரையும் அன்போடு வரவேற்ற மதிப்பிற்குரிய பள்ளியின் தலைமையாசிரியர் வள்ளிநாயகி மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்த கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர் பொறியாளர்  சர்வம் சரவணன்  பள்ளி மாணவிகள் ஒவ்வொருவரும் இன்னும் சிறப்பான அறிவியல் கல்வியை பெற வேண்டும் என பாராட்டுகளை தெரிவித்து சிறப்பித்தனர்.

இந்த அறிவியல் கண்காட்சி நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர்  குகன், சால்வை அணிவித்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!