பூட்டுத்தாக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா! அமைச்சர். ஆர். காந்தி பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், பூட்டுத்தாக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டு, நூற்றாண்டு நிறைவு செய்வதையொட்டி, பள்ளி கல்வித் துறையின் சார்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
100 ஆண்டுகள் கடந்த பள்ளிகளில் "நூற்றாண்டு விழா கொண்டாடும் திட்டத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் 2,238 அரசு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றன. இதில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 27 பள்ளிகள் நூற்றாண்டு கடந்துள்ளது. இப்பள்ளி மென்மேலும் வளர்ந்து பல சாதனையாளர்களின் பயிற்சி பட்டறையாக விளங்க வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், உலகம் உங்கள் கையில் மடிகணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். ஆகவே, இதுபோன்ற நற்வாய்ப்புகளை மாணாக்கர்கள் பயன்படுத்தி அனைவரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். தங்களுடைய பெற்றோர்களின் கனவை நினைவாக்க வேண்டும். அவர்களை என்றென்றும் மறக்கக்கூடாது என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.
தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதை கண்டு களித்தார்.
இந்நிகழ்ச்சியில் இரத்தினகிரி தவத்திரு. பாலமுருகனடிமை சுவாமிகள், ஒன்றிய குழுத் தலைவர். புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் அருண், தலைமையாசிரியர். விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக