தீயணைப்பு துறையினரால் சிறுவன் மீட்பு !!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள போடி-நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தவசி, தனது உறவினர்களுடன் சுருளி அருவிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். எனினும், அருவியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால், அவர்கள் அருகில் உள்ள சுருளிப்பட்டி முல்லைப் பெரியாறு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தவசி ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சிறுவனைச் சடலமாக மீட்டனர். இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!