குடியாத்தத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் மற்றும் நகரம்,046 குடியாத்தம்(தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டா சுப்பையா தெரு பகுதியில் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களித்தல், வாக்களிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 18-03-2026 மாலை 04.30 மணியளவில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குடியாத்தம் வருவாய் ஆய்வாளர்கள், நகராட்சி துறை அலுவலர்கள், சமுதாய அமைப்பாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக