அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
திண்டுக்கல் : அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வேடச்சந்தூர் பூத்தாம்பட்டியில் உள்ள சமூக நலக் கூடம் அரங்கில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நிருபர் தண்டபாணி தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் தங்கபாண்டியன் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் நவநீதகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் P. சிவகுமார் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி சட்ட விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மண்டல தலைவர் பாலன். நத்தம் ஸ்டாலின் சேவியர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜரத்தினம். திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன். பிரபாகரன். மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக