ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள்!!

கோடை காலத்தில் அதிகப்படியான பயணிகள் நெரிசலை சமாளிக்க ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது.

ரயில்கள் விவரம்:

1) ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (Train No. 07355): ஏப்ரல் 5, 12, 19, 26 மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும்.

2) ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ் (Train No. 07356): ஏப்ரல் 6, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18, 25, ஜூன் 1 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 7.40 மணிக்கு ஹூப்பள்ளியை அடையும்

சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் சிறப்பு ரயில்கள் நின்று செல்லும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!