புதுக்கோட்டை அருகே வாணக்கன்காட்டில் மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வீரக்குடிநாடு வாணக்கன்காடு கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் 62 ஆம் ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மன் இளைஞர் மன்றமும் ஊர் பொதுமக்களும் இணைந்து தமிழகத்தின் தலைசிறந்த அணிகள்
பங்கேற்ற பெண்கள் ஆண்கள் மாநில கபடி போட்டி அம்மன் திடலில் நடைபெற்றது. பெண்கள் 26 அணிகளும் ஆண்கள் 32 அணிகளும் பங்குபெற்றன. கபடி இறுதிப் போட்டியில் பெண்களுக்கான கபடி போட்டியில் ஒட்டந்சத்திரம் எஸ்எம்விகேசி அணியினர் முதல் பரிசு ரூ. 1 லட்சம் பெற்றனர். பொத்தனூர் மாஸ்டர் அணியினர் இரண்டாம் பரிசுரூ. 70 ஆயிரம் பெற்றனர். கோவை என்ஜிஎம் அணியினர் ரூ. 50 ஆயிரம் பெற்றனர்
அரியலூர் எதிர்நீச்சல் அணியினர் நான்காம் பரிசு ரூ 50 ஆயிரம் பெற்றனர்.
அதேபோல ஆண்கள் அணியில் வாணக்கன்காடு மாவீரர் மாதுரார் அணியினர் முதல்பரிசு ரூ 1. லட்சம் பெற்றனர். செலம் வினாயக மிஷன் அணியினர் இரண்டாம் பரிசு ரூ. 70 ஆயிரம் பெற்றனர். சென்னை பல்கலைக்
கழகம் வேல்ஸ் அணியினர் மூன்றாம் பரிசு ரூ 50 ஆயிரம் பெற்றனர் சென்னை எஸ் ஆர்எம் அணியினர் நான்காம் பரிசு ரூ. 50 ஆயிரம் பெற்றனர்.
இப்போட்டியில்
கலந்து கொண்ட அணியினருக்கு
உணவு
தங்கும் இடம்
பயணப்படி
சுவை மிகுந்த பலாப்பழம் வழங்கப்பட்டது தமிழகத்திதவைசிறந்த ஆட்டக்கரர்களுக்கு சிறப்பு பரிசாக
மெடல்,
கேடயம்,
சாம்பியன் கோப்பை
பிரிட்ஜ்,
டிவி,
சைக்கிள்,
ஏர் கூலர், மற்றும் மாரியம்மன் கோவில் பிரசாதம் மற்றும் சிறப்பு பரிசு ஆகியவற்றை வாணக்கன்காடு அம்மன் இளைஞர் மன்றம் ஊர் பொதுமக்களும் வழங்கி மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற கபடி திருவிழாவில் கலந்து கொண்ட தலை சிறந்த அணிகளின் வீரர்களுக்கும் சிறப்பு விருந்தினருக்கும் நன்கொடையாளர்களுக்கும் பார்வையாளர்கள் கிராமத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக