தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில், அக்கட்சியின் சார்பில் பிரிசில்லா ஜான் பாண்டியன் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் 'தாமரை' சின்னத்தில் அவர் களம் காண்கிறார். கூட்டணியின் முக்கிய அங்கமாகத் திகழும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ராஜபாளையம் தொகுதியில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தீவிர தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஜான் பாண்டியனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ராஜபாளையம் தொகுதி அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதுடன், கூட்டணி கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக