புதுக்கோட்டை அருகே வேள் வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!!


புதுக்கோட்டை மாவட்டம் வேள்வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (27.03.2026) அன்று பள்ளி ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இன்று முதல் வகுப்பில் சேர்க்கப் பட்ட ஒன்பது மாணவர்களுக்கும் உள்ளூர் பிரமுகர் கனேஷ்முருகன் ஸ்கூல் பேக் வழங்கினார்கள்.  ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் பள்ளி குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கண்கொள்ளாக் கலைநிகழ்ச்சிகளை திரளான பொதுமக்கள்கண்டு களித்தனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!