நெமிலி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா!எஸ். மணிவண்ணன் பங்கேற்பு!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் R. வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மார்ச் - 1 அன்று பிறந்தநாள் விழா காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருமால்பூர், பிள்ளைபக்கம், ஜாகீர் தண்டலம், மேல்வென்பாக்கம், கண்டிகை ஆகிய கிராமங்களில் நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழகத்தின் சார்பில்  அவைத்தலைவர். பொன்னுரங்கம் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தேர்தல் பணிக்குழு உறுப்பினருமான. எஸ். மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு கழக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, 500  நபருக்கு அன்னதானம் வழங்கினார். 

இதில் தேர்தல் பணி குழு உறுப்பினர்கள். தேவேந்திரன், மணிகண்டன், சண்முகம், ஒன்றிய துணை செயலாளர். சித்ரா மனோகரன், மாவட்ட பிரதிநிதி மோகன் குமார் , மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழகத்தின் நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் பிரதிநிதிகள், BLA2, BDA, BLC, மகளிர்  அணி  மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!