ஆலங்குடி தர்ம சம்வர்த்தினி நாமபுரீஸ்வரர் சிவாலயத்தில் சனிபெயர்ச்சி விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோயில்களை சார்ந்த இரண்டாவது குரூஸ் தலமாக விளங்குகின்ற ஆலங்குடி ஸ்ரீதர்ம சம்வர்த்தினி உடனுரை ஸ்ரீ நாம புரீஸ்வரர் திருக்கோயிலில் சனிபெயர்ச்சி விழா நடைபெறுகின்றது. சனிபகவான் நாளை மறுநாள் 6- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.26 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார் அது சமயம் நவக்கிரக சாந்தி பரிகார பூஜை ஹோமம் காலை 7.35 மணிக்கு தொடங்குகிறது மகா பூர்ணாஹூதி பால புரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 10 மணிக்கு, மகா தீபாரதனை காலை 11 மணிக்கு, பக்தர்கள் சிறப்பு சங்கல்பம், மாலை 6 மணிக்கு, ஏழு தீபாரதனை பக்தர்கள் எல்லோரும் பங்குபெறும்சிறப்பு கூட்டுவழிபாடு மாலை 7 மணிக்கு, யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம். இரவு 8 மணிக்கு வழங்கப்படும். நவக்கிரக சாந்தி பூஜையில் கலந்து கொல்லும் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும். பரிகாரம் செய்துகொள்ளும் ராசிகள், மீனம், கும்பம், தனுசு, விருச்சகம், கன்னி, மேஷம், சிம்மம், கடகம், ஆகிய ராசிகள் பரிகாரம் செய்துகொள்ளவும், நற்பலன்களை பெறும் ராசிகள் மகரம், துலாம், மிதுனம், ரிஷபம் ஆகிய ராசிகள் நற்பலன்களை பெறுகின்றனர். மேலே குறிப்பிட்ட அனைத்து பலா பலன்களும் கோச்சார அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கிறது இவை அனைத்தும் அவரவர்கள் தசா புத்தி பலானுக்கு ஏற்ப பலாபலன்கள் மாறுபடலாம்,
இருப்பினும் பக்தர்கள் தினந்தோறும் அல்லது சனிக்கிழமை சிவாலயத்திற்கு சென்று சனிபகவானை தரிசனம் செய்வதன் மூலம் இறைவன் அருளால் அனுகூலங்கள் ஏற்படலாம். சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை ஸ்ரீ நாமபுரீஸ்வரர் நற்பணி மன்றம் செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக