புதுக்கோட்டை அருகே வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் பெண்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலின் 62-ம் ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மன் வீதியுலா நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை பால்குடம், காவடி எடுத்தல், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுதல் மாவிலக்குபோடுதல் போன்ற தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று மாலை வெகு விமர்சையாக நடந்தது. இந்த திருவிழாவில் வாணக்கன்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் வீற்றிருக்க வாணவேடிக்கையுடன் மங்கல இசை முழங்க நான்கு வீதிகள் வழியாக ஆண்கள், பெண்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டுச் சென்றனர். திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வீரக்குடிநாடு வாணக்கன்காடு கிராம பொதுமக்கள், அம்மன் இளைஞர்கள், செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை வடகாடு போலீசார் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக