குடியாத்தத்தில் இன்னர் வீல் கிளப் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் இன்னர் வீல் . கிளப் சார்பாக ரோட்டரி கட்டிடத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் . தலைவி டாக்டர். செல்வராணி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக வழி நடத்திச் சென்ற நிர்வாகிகள் புவனேஸ்வரி அசோகன். கஸ்தூரி சுகுமார். தமிழ்ச்செல்வி கணேசன். ஆகியோருக்கு சென்னையில் தலைமை கிளப்பில் பாராட்டி விருது வழங்கப்பட்டது அதைத்தொடர்ந்து விருது. பெற்ற பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர்கள் திலகவதி ராஜேந்திரன் அமுதா சிவப்பிரகாசம் மற்றும் விஜயலட்சுமி ராமமூர்த்தி பிரியா குப்புசாமி சாரதா மோகன் ஆயிஷா பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக