சேமக்கோட்டை அங்காளம்மன் கோயில் சார்பில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ அங்காளம்மன், பெரியாயி பரிவார தெய்வங்களுக்கு இரண்டாம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 20ம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சக்தி கரகம் எடுத்தல், சாகை வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மயான கொள்ளை திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.
இதையொட்டி, அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மயானக்கொள்ளை ஊர்வலம் புறப்பட்டு அருகில் உள்ள சுடுகாட்டை சென்றடைந்தது. அங்கு சாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க, மயான கொள்ளை உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக