புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்ற பொதுநூலகம் திறப்பு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருக்கோகர்ணம் பகுதியில் ரூபாய் 10 லட்சம் செலவில் பொதுநூலகம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நூலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா , விராலிமலை சந்திரசேகரன்,மாவட்ட செயலர் செல்லபாண்டியன், மாநகராட்சி மேயர் திலகவதி , வார்டு உறுப்பினர் கனகம்மன் ஜெ.ரமேஷ்பாபு, பாத்தம்பட்டி மதியழகன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர்கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்
கருத்துரையிடுக