மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டம் !!
தேனி மாவட்டம்,மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர். ரெபேக்கா தலைமையில் மாவட்ட DHO அலுவலகம் முன்பு ஊழியர்களுக்கு ரூ 15 ஆயிரம் ஊதியம் வழங்கு, பணிவரன் முறைப்படுத்து, பணி நிரந்தரப்படுத்துக என காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியூ மாவட்ட தலைவர். T. ஜெயபாண்டி, மாவட்ட செயலாளர். G. சண்முகம் , மாவட்ட பெருளாளர். S. வெண்மணி, வாழ்த்துரை சிஐடியூ முன்னாள் மாவட்டச் செயலாளர். எம். ராமச்சந்திரன் ,மக்களை தேடி பருத்துவ ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள். செல்லப்பாண்டியம்மாள், தீபா, நந்தினி, கலைச்செல்வி, ராணி, லாவண்யா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.வாழ்த்துரை கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர். T. செந்தில் காமு, பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர். தெய்வேந்திரன் ,அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர். முத்துக்குமார், மாவட்ட துணைத் தலைவர். ரவிக்குமார் , வாலிபர் சங்க மாவட்ட செயலாளர். D. நாகராஜ், தேனி வாலிபர் சங்க தாலுகா செயலாளர். நாகராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக