ஹயக்ரிவர் பள்ளியில் அறிவியல் தினம் மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா!!
அரக்கோணம் வடமாம்பாக்கம் கிராமத்தில் இயற் கைச் சூழலுடன் பாதுகாப் பான இடத்தில் ஹயக்ரிவர் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி சீனி யர் செகண்டரி பள்ளி உள்ளது . இந்தப் பள்ளி யில் இளம் மழலையர்களின் பட்டமளிப்பு விழா மற்றும் அறிவியல் தின விழா இணைந்து கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் கீதா சிவகுமார் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர்கள் ரவீந்திரன் சாந்தி முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் கோமளா தக்கோலம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் மனநல ஆலோசகர் டாக்டர் மோனிஷா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங் களை வழங்கினார்கள். தொடர்ந்து நூற்றுகணக்கான மாணவர்களின் அறிவியல் தின கண்காட்சிகளையும் சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக