கோவையில் செய்தியாளர்களை சந்தித்த யூத் திரைப்பட குழுவினர்!!

கென் கருணாஸ் இயக்கத்தில் அவர் உட்பட அனிஷ்மா அருள்குமார், மீனாட்சி தினேஷ் ஆகியோர் நடிப்பில் தயாரிப்பாளர் கருப் தயாரிப்பில் உருவாகியுள்ள யூத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பலரது வரவேற்பை பெற்றுள்ளது.

பட குழுவினர் பல்வேறு பகுதிகளில் திரையரங்கிற்கு நேரடியாக சென்று பார்வையாளர்களிடம் திரைப்படம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.  அதன்படி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

படத்தின் இயக்குனரும் நடிகருமான கென்கருனாஸ், அனிஷ்மா அருள்குமார், மீனாட்சி தினேஷ், அபிஷன் தேவர்ஷா, தயாரிப்பாளர் கருப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது ஒவ்வொருவரும் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தற்பொழுது இந்த படத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள வரவேற்பு குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

இந்தசெய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த கென்கருணாஸ், அனைத்து பகுதிகளிலும் இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அது எங்கள் படக்குழுவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். கதை எழுதும் பொழுதே சுராஜ் மற்றும் பசுபதி ஆகிய இருவரும் தான் நடிப்பது போன்று திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் பசுபதி நடிப்பதற்கு தேதிகளுக்கு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் சுராஜ் அவருக்கும் நடிப்பதற்கும் தேதிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை பிறகு தயாரிப்பாளர்  ஏதோ நிகழ்விற்கு சென்றிருந்த போது சுராஜிடம் பேசி இறுதி செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த படத்தை எடுக்கும் பொழுது தங்களுக்கு அட்வைஸ் கொடுப்பதற்கும் நன்கு அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவைபட்டார் அப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த ஒருவர் நம் திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அப்பொழுது ஜிவி பிரகாஷை முடிவு செய்ததாகவும் ஜி வி பிரகாஷும் தனக்கும் தங்கள் குழுவினருக்கும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார். 

தனக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையே இருந்ததில்லை ஆனால் இயக்குனர் ஆன பிறகு தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். அசுரன் விடுதலை ஆகிய படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களை மட்டுமே நடித்ததால் அது போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே தொடர்ச்சியான படங்களில் தனக்கு கிடைத்ததாகவும் அப்படி இருக்கும் பொழுது ஒரே மாதிரி இருக்கக் கூடாது என்பதற்காகவும் வேற எந்த இயக்குனரும் மாற்று கதாபாத்திரத்தை கொடுப்பதற்கு முன் வராததாலும் இந்த படத்தை ஜாலியாக இயக்கியதாக குறிப்பிட்டார்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!