சிவகங்கை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். பாண்டியராஜன் விருப்ப மனு !!
திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு தனது விருப்பமனுவை கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அளித்துள்ளார் இவர் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 84 நாடு வல்லம்பர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஊரைச் சார்ந்தவர் இவரது சொந்த ஊர் வம்பரம்பட்டி இவர் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக திறம்பட பணியாற்றியவர் திமுகவில் துடிப்புடன் செயலாற்றும் கொள்கை வீரர், இவர் வழக்கறிஞர் இவரது பணியை பாராட்டி சிவகங்கை மாவட்ட அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் இவருக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பொறுப்பை வழங்கியுள்ளார் தற்பொழுது காங்கிரஸ் கட்சி காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் இவர் புதுக்கோட்டை மாவட்டம் தனது சொந்த ஊரான வம்பரம்பட்டி திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு வருவதால் திமுக சார்பில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்ப மனுவை கட்சித் தலைமையிடம் தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக