வேப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடவு!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் ரோட்டரி சங்கம் மாவட்ட ஆளுநரின்  ரோட்டரியின் 121 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையின் வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு இரும்பு வலைகள் நீர் பாய்ச்சுவதற்கு பைப் லைன் அமைத்துக் கொடுத்து ரோட்டரி சங்கத்தின் 2981 மாவட்ட ஆளுநர். லியோன் அவரது திருக்கரங்களால் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.மாவட்ட துணை ஆளுநர்,அசோக்குமார்,வேப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர். அர்சத் முன்னிலையில் நடைப்பெற்றது.

 

இதில்  உறுப்பினர்கள் வேப்பூர் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் தாசன் சங்கத்தின் தலைவர் ஆனந்தன், சங்கத்தின் செயலாளர் அன்பரசன், அமானுல்லாகான், ராமலிங்கம், கனகராஜ், புவனா சில்க் சரவணன், ராமதாஸ் செட்டியார்,ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அதோடு வெல்கம் போர்டு வேப்பூர் நான்கு எல்லைகளிலும் விருதாச்சலம் ரோடு சேலம் ரோடு திருச்சி சர்வீஸ் ரோடு சென்னை சர்வீஸ் ரோடு ஆகிய நான்கு இடங்களிலும் புதியதாக வைக்கப்பட்டு அதை திறந்து வைத்தார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!