மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நடைபெறும் “மாபெரும் கண்டன ஆர்ப்பட்டத்தில்” தேமுதிக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்க வேண்டி அறிக்கை!!
வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிறு-குறு தொழில்கள் உள்ள தமிழ்நாட்டுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் தனித்தனியாக (15.03.2026) ஞாயிற்றுக் கிழமை - காலை 10.30 மணிக்கு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக சார்பில் நமது கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தலைமை கழகம் கேட்டுக்கொள்கிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.




கருத்துகள்
கருத்துரையிடுக