ஈரான் தாக்குதல்!!

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை நிலவுகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானை தாக்கியது.இதில் ஈரான் அதிபர் ஆய்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். பதில் தாக்குதலாக ஈரான் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க நிலைகளை குறிவைத்து தாக்கியது.ஈரானின் அதிபர் 1981 இல் இருந்து அதி முக்கிய அதிபராக இருந்து வந்தார். அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானில் 130 க்கும் மேற்பட்ட  பகுதிகள் சேதமடைந்துள்ளது. 555 பேர் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் மீதான இந்த தாக்குதலுக்கு காரணம் அணு ஆயுதங்களை ஈரான் வாங்கக்கூடாது. அவர்களின் ஏவுகணை துறையை அழிக்க வேண்டும். ஆயுதங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் அத்துடன் அமெரிக்காவின் புது அணு திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அப்படி ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தகுந்த விளைவுகளை சந்திக்க நேரும் என்று பல வாரங்களுக்கு முன்பே  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி " ஆப்ரேஷன் எபிக் ப்யூரி "  என்ற பெயரில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரான் தன் அணு ஆயுத நடவடிக்கை அமைதி நோக்கத்திற்காக தான் வைத்திருப்பதாகbகூறுகிறது. அமெரிக்கா தொடர்பு கொண்டுள்ள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளான கத்தார் சவுதி அரேபியா போன்ற நாடுகளை ஈரான் குறி வைத்து பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்களை ஈரான் சுட்டு  வீழ்த்தியது. துபாயின் சர்வதேச விமான நிலையம் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தது.

ஐ ஆர் ஐ எஸ்  டேனா கப்பல் 

 ஈரானுக்கு சொந்தமான ஐ ஆர் ஐ எஸ் டேனா கப்பல் ஈரான் கடற்படைக்கு சொந்தமான நீர் மூழ்கி கப்பல் வகையை சார்ந்தது. இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகில் 40 கடல் மைல் தூரத்தில் இந்த கப்பல் நீர் மூழ்கி குண்டுகளால் அமெரிக்காவால் தாக்கி அழிக்கப்பட்டது. 1500 டன் எடை மற்றும் 95 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் நூர் எனப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் 76 மி மீ பஜர் 27 ரக கடற்படை துப்பாக்கிகள் தளத்திலிருந்து வான்நோக்கி செலுத்தும் ஏவுகணை செலுத்திகள் போன்றவற்றைக் கொண்டது . 2022 - 23 ஆண்டுகளில் ஈரான் தன் கடற்படை பலத்தை காட்டுவதற்காக உலகம் முழுவதும் 65 ஆயிரம் கிலோமீட்டர் கடற்பயணத்தை மேற்கொண்டது. இது ஈரானால் முற்றிலும் வடிவமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்திருந்தது. 180 பேர் கொண்ட இந்த கப்பலில் 40 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து ஆறாவது நாளாக தாக்குதல்கள் இருபுறமும் நடந்து கொண்டிருக்கிறது ஈரான் அஜர்பைஜான் நாட்டின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. கத்தார் தலைநகர் தோகா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் தொடருமானால் உலக நாடுகள் இடையே மிகப்பெரிய பொருளாதார சரிவை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இன்னும் இரண்டு வாரங்கள் இந்த நிலைமை தொடர்ந்தால் எரிபொருள் விலை 50% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல்கள் மூன்றாம் உலகப்போருக்கு அடித்தளமாக அமையலாம் என்ற மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியர.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!