நெமிலி அருகே காட்டுப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெற எழுது பொருள் உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த டாக்டர். மு.கோபாலகிருஷ்ணன்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை . நதியா,உதவி தலைமை ஆசிரியர். ராஜசேகர் மற்றும் பெருமைக்குரிய நம் ஆசிரியர்கள் சீனிவாசன், சரவணன் , கதிரேசன், இளவரசி மற்றும் கனகா அவர்களின் முன்னிலையில்
பள்ளி மேலாண்மை குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்று வாழ்த்தி!
பள்ளி மேலாண்மை கல்வி குழு உறுப்பினர் டாக்டர். மு.கோபாலகிருஷ்ணன் மற்றும் சைலஜா அவர்கள் எழுது பொருள் உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர். வளர்மதி செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர்.பவித்ரா பொன்னுரங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள்.சக்திவேல், ராஜ்குமார், சுதேகன், மகிழினி , நித்யா ஆகியோர்கள் உடனிருந்து அனைத்து மாணவர்களையும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக