ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான பிறகு முதல் முறையாக சொந்த ஊருக்கு வந்த எல்.கே. சுதீஷிற்கு பட்டாசுகள் வெடித்து மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சொந்த கிராமத்தில் குலதெய்வத்தை வழிபடுவது மகிழ்ச்சி.
ஆம்பூரில் பிரேமலதா போட்டியிடுவது குறித்து திமுகவுடன் பேசிய பிறகு தான் தெரிய வரும். ஆம்பூரில் நான் படித்ததில் இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் தேர்தல் சமயம் என்பதால் நான் இப்போது வந்தது பேசுபொருள் ஆகிவிட்டது.
"நடிகர்கள் கட்சி தொடங்கினால் வெற்றி பெறுவது கடினம் -
குடியாத்தத்தில் ராஜ்யசபா உறுப்பினரும் தேமுதிக பொருளாளருமான LK.சுதீஷ் பேட்டி"
வேலூர் மாவட்டம், ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேமுதிகவின் பொருளாளர். எல்.கே சுதிஷ் முதல் முறையாக தனது சொந்த ஊரான குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்திற்கு வருகை தந்தார்.
இவருக்கு கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மேல தாளங்களுடன் மாலை அணிவித்து வரவேற்ப்பு அளித்தனர். பின்னர் சொந்த ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடும் செய்தார். அப்போது உள்ளூர் பொதுமக்கள் எம் பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கேக் வெட்டி கொண்டாடினர்.
எம். பி. எல். கே. சதீஷ் வருகை தந்த போது அவரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன் முதலாக எனது குல தெய்வத்தை கும்பிட வந்தேன். மேலும் எனது சொந்த ஊர் என்பதால் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க வந்தேன். இதற்கு பிறகு தான் திமுக கூட்டணியில் எங்களுக்கு எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என பின்னர் அறிவிப்பார்கள். தொகுதி அறிவித்த பிறகு மீண்டும் இங்கே வந்து எங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு பிரச்சாரத்தை துவங்குவேன்
ஆம்பூர் தொகுதியில் பிரேமலதா நிற்பது குறித்து வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு, நான் படித்தது எல்லாமே ஆம்பூரில் தான் எனக்கு அங்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் எப்போதும் அங்கு செல்வேன். தேர்தல் நேரம் என்பதால் இந்த சமயத்தில் நான் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டது பேசு பொருளாகியுள்ளது.
ஆம்பூரில் பிரேமலதா நிற்பது குறித்து எங்கள் கையில் இல்லை திமுக விடம் தான் உள்ளது.
2006 இதே குடியாத்தத்தில் நான் போட்டியிடும் போது முப்பதாயிரம் வாக்குகள் வாங்கினோம்.
ரசிகர் மன்றமாக அவ்வளவுதான் வாங்க முடிந்தது அதற்கு பிறகு கட்சியாக மாறிய பிறகு அதைவிட அதிக வாக்குகளை கள்ளக்குறிச்சி வாங்கினேன் ஆனால் வெற்றி பெற முடியவில்லை.
"நடிகர்கள் கட்சி ஆரம்பித்த பிறகு வெற்றி பெறுவது கடினம் தான்."
எம்.பி ஆன பிறகு எங்க மண்ணில் எங்கள் சாமியை கும்பிடும்போது மிகவும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது.
ராமதாஸ், சசிகலா கூட்டணிக்கு வாழ்த்துக்கள் என எல்.கே.சுதீஷ் கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக