திருமயம் தொகுதி திமுக வேட்பாளர். எஸ்.ரகுபதி!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர். எஸ். ரகுபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

 எஸ்.ரகுபதி,  தந்தை பெயர்.சேவுகன் செட்டியார்.  பிறந்த தேதி 30.07.1950.

சொந்த ஊர்.திருமயம் அருகே உள்ள வி.லெட்சுமிபுரம்.  படிப்பு. பிஎஸ்சி பிஎல்.  

இதற்கு முன்வகித்த பதவிகள். 1972 ல் இருந்து அதிமுக வில்  புதுக்கோட்டை  மாவட்ட செயலாளர் ஆக இருந்து வந்தார்.  எம்ஜிஆரின் மறைவுக்குப்பின ஜெ.அணியில் சேர்ந்தார்.

1991_96 வரை திருமயம்  தொகுதி எம்.எல்.ஏ ஆக  வெற்றி பெற்று அமைச்சராக பணிபுரிந்தார். வக்கீல்கள் சங்கம்,ரோட்டரி,லயன்ஸ் கிளப்களில் தலைவராக பணியாற்றினார்

அதற்குப்பின்  அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரகுபதி திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுக வில் சேர்ந்து புதுக்கோட்டை லோக்சபா எம்.பி ஆகி மத்திய இணை அமைச்சராக பணியாற்றினார். பிறகு திமுக சார்பில் 2016,2021 ஆகிய சட்ட சபைத்தேர்தல்களில் திருமயம் தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆன ரகுபதி 2021 _26 காலத்தில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.  தற்போது திமுகவில் மாவட்ட செயலாளராக பணிபுரிகிறார். திருமயம் சட்ட சபைத்தொகுதியில் 1989,1991, 2011,2016,2021 ஆகிய 5 தேர்தல்களில் போட்டியிட்ட ரகுபதி 3 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 6 வது முறையாக ரகுபதி களம்காண்கிறார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!