மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்!!

வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினரை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் ஆகியோர்  நேரில் சந்தித்து மாணவியின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அவர்கள், குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இந்த சந்திப்பின் போது ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் காசிவிஸ்வநாதன், தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும்வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் சத்யராஜன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!