கேஸ் சிலிண்டர் விலை உயர்வு – ஏழை மக்களின் சமையலறை முடக்கம்!ராமநத்தம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!
கடலூர் மாவட்டம், ராமநத்தம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய பாஜக அரசின் அநியாயமான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய பொறுப்பு செயலாளர். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னுசாமி, ராஜசேகர், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகையன், ஒன்றிய செயலாளர் நிதி உலகநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தேவா, அம்பிகா, ஒன்றிய பொருளாளர் பெரியசாமி, நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னதுரை, உத்தமன், பரமசிவம், லெட்சுமணன், கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கோடி துணி போட்டு ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக