தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவராக கடலூர் ஜி.ஆர். துரைராஜ் நியமனம்!மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே ஐந்தாம் தேதி வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு நடைபெறுவது தொடர்பாக கடலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரம ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், கடலூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர். கே.குழும நிர்வாக இயக்குனர் ஜி.ஆர். துரைராஜை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனை மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கூட்ட அரங்கத்தில் மாநில துணைத்தலைவராக ஜி.ஆர்.துரைராஜ் அறிவித்தபோது அனைவரும் ஆமோதித்து கைத்தட்டி வரவேற்று நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட கடலூர் ஜி ஆர் துரைராஜ் , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவுறுத்தலின் பேரில் பேரமைப்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவேன் என தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக