யோகாசனத்தில் உலக சாதனை செய்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளனர். உடல் நலமே உலக வளம் என்று உடல் ஆரோக்கியத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சியினை இணையவழியில் புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் நடத்தியது.
இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், குஜராத், கர்நாடகா, கேரளா, போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், யோகா ஆசிரியர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த உலக சாதனை நிகழ்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேலந்லைப்பள்ளியைச் சேரந்த மாணவர்கள் 20 பேர் இணைய வழியில் கலந்து கொண்டு உபவிஷ்த கோணாசனத்தின் இறுதி நிலையில் அசைவு இன்றி மூன்று நிமிடங்கள் செய்தார்கள். இந்த நிகழ்வானது சர்வதேச சாதனைப் புத்தகத்தில் சிறந்த சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
யோகாசனத்தில் உலக சாதனை புரிந்த பள்ளி மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, இயக்குனர் ரா.சுதர்சன் ஆகியோர் உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது ஆத்மா யோக மைய நிறுவனர் யோகாச்சார்யா ரெ.பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு யோகாசனத்தில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக