திருமயத்தில் மதசார்பற்ற ஐனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் பெட்ரோல்,டீசல் ,சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்தும் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பஸ்நிலையத்தில் மதசார்பற்ற ஐனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் பெட்ரோல்,டீசல் ,சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்தும் இனிவருங் காலத்தில் அவற்றை போதிய அளவு சேமித்து வைக்கவும் வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர். அவைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார்.திருமயம் திமுக தெற்கு ஒன்றிய செயலர் ஆறு.சிதம்பரம் வரவேற்றார். இதில் டாக்டர் . ஆர்.அண்ணாமலை(திமுக), முன்னாள் எம்.எல்.ஏ. ராம.சுப்புராம்(காங்), திலீபன் ராஜ்,
(வி.சி.க), சசிகுமார்(தேமுதிக) மதி ( தமிழர்தேசம்),ஜீவானந்தம்(சிபிஐ.எம்) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். திருமயம் வடக்கு ஒன்றிய திமுக செயலர். கணேசன் நன்றி கூறினார். ஆர்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக