திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் மூன்று நபர்களுக்கு வெற்றிகரமாக செய்யப்பட்ட முழங்கால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அண்ணா அரசு மருத்துவமனையில் மூன்று நபர்களுக்கு முழங்கால் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக தலைமை மருத்துவர் மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் நெடுங்கிள்ளி, சதீஸ். ஹரிஹரன் மற்றும் மருத்துவக்குழுவினரால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. கால் வலியால் அவதிப்பட்ட அரண்மனைப்பட்டி மீனாள்(60),
சித்திரம்பூர் சீதாலெட்சுமி( 55) விராச்சிலை வாசுகி( 60) ஆகியோர் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றனர். பின்னர் இந்த 3 பேருக்கும் முதல்வரின் மருத்துவகாப்பீட்டுத்திட்டத்தில் மூட்டுமாற்று அறுவை கிகிச்சை (ஆபரேசன் ) வெற்றிகரமாக செய்யப்பட்டு நலமுடன் உள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் இதுபோன்ற ஆபரேசன் நடத்துவது அரிதாகும்.ஆபரேசன் முடிந்த பயனாளிகள் தற்போது நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக