முதிர்ந்த தமிழ் அறிஞர்' விருது பெற்ற கவிஞர். சாமிதுரைக்கு பாராட்டு விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரைச் சார்ந்தவர் கவிஞர். சாமிதுரை இவர் தமிழ் மீது பற்று கொண்டு தொண்டாற்றிய பணிகளை பாராட்டி தமிழக அரசு 'முதிர்ந்த தமிழறிஞர்' விருதினை வழங்கிகௌரவப்படுத்தியது. இதனை தொடர்ந்து இவருக்கு அரக்கோணம் திருவள்ளுவர் மக்கள் நலப் பேரவை சார்பிலும் பாராட்டு விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது அதன்படி ஏற்பாடு செய்யபட்ட பாராட்டு விழாவிற்கு பேரவை தலைவர் ராமன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர். ஞானமூர்த்தி மற்றும் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரின் நேர்முக உதவியாளர். ராஜ்குமார் எம்ஆர்எப் தொழிற்சங்கத் தலைவர். முரளி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள் மேலும் வழக்கறிஞர். சிட்டிபாபு, எழுத்தாளர். மோசூர் கணேசன், இஸ்மாயில், அப்சல்கான் உட்பட அரசியல் பிரமுகர்கள் கேவி.இரவிச்சந்திரன், மோகன்ராம், பார்த்தசாரதி, ஹரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கவிஞர். சாமிதுரையை பணிகளை பாராட்டி பேசினார் இந்தி ஆசிரியர். மணிமேகலை இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக