தவெக தலைவர். விஜய் தேர்தல் வாக்குறுதி!!

விஜய் வாக்குறுதி: 2 ஏக்கர் வரை உள்ள விவசாய குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும் - விஜய்.

2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியர்களாக இல்லாதபட்சத்தில் அவர்கள் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட - தொழிற்கல்வி முதல் அனைத்து வகை - படிப்புகளின் செலவையும் அரசே ஏற்கும்.

தவெக ஆட்சி அமைத்தால் 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை; அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படும்.

தவெக ஆட்சி அமைந்தவுடன் உரத்தட்டுப்பாடு சரி செய்யப்படும், கூட்டுறவு பயிர் கடன் ரத்து செய்யப்படும்.

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும்.

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வங்கிக்கடனை 50% ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும் - தவெக தலைவர் விஜய்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!