திருவரங்குளத்தில் ஸ்ரீ அரங்குலநாதர் பெரியநயகி அம்பாள் கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத பிரதோஷ விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ஸ்ரீ அரங்குலநாதர் பெரியநயகி அம்பாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் திரவிய பொடிகள் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர் அலங்காரம் செய்து மூலஸ்தானத்தில் உள்ள சுயம்புலிங்க சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது பின்னர் பக்தர்கள் சிவ சிவ ஹர ஹர கோசத்துடன் சுவாமி அம்பாளை காளை வாகனத்தில எழுந்தருள செய்து சிவ சிவ ஹர ஹர கோசத்துடன் மூன்று முறை பிரகார உலா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நந்தி பகவானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக