மக்களை திட்டமிட்டு ஏமாற்றும் தி.மு.க. அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் சி.வி.சண்முகம் எம்.பி. பேச்சு!!
விழுப்புரம் மாவட்டம்,மக்களை திட்டமிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்மு கம் எம்.பி. பேசினார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள். போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து நேற்று முன்தினம் விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி அர்ஜுனன்,
பா.ம.க. எம்.எல்.ஏ.,
சிவக்குமார், பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர். ஏ.ஜி.சம்பத் த.மா.கா.
மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.வி சண்முகம் எம்.பி. பேசியதாவது:-
5 ஆண்டு காலம் மக்களைப் பற்றி துளியும் சிந்திக்காத கவலைப்படாத
கோபாலபுரத்து குடும்ப ஆட்சியை தூக்கியெறிய நடத்தப்படுகிற இறுதி ஆர்ப்பாட்டம் இது. அனைத்து மக்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம் இது,திராவிட மாடல் என்று சொல்லி கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்ற இந்த அரசு, கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றியதா? மக்களுடைய பிரச்சினைகள்
தீர்க்கப்பட்டிருக்கிறதா? இந்த அராஜக அரசை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமல்ல, இவர்கள் செய்திருக்கிற
தவறால் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்கள் அத்தனை பேரையும் புழல் சிறைக்கு அனுப்புகிற நாள் ஏப்ரல் 23. இதை மனதிலே வைத்து நாம் செயல்பட வேண்டும்.
இந்த 5 ஆண்டில் விலைவாசியை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்
களா? விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்து மக்களை காப்பாற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. படித்த
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. எல்லா அமைச்சர்கள் மீதும் இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டு விசாரணை நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. எத்தனை
அமைச்சர்கள் சிறையிலிருந்து தேர்தலை சந்திக்கப் போகிறார்கள்
என்பதை இன்னும் 30 நாட்களில் பார்க்கப்போகிறோம்தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஒன்று மட்டும் வளர்ந்திருக்கிறது. பெருகியிருக்கிறது. அது போதை கலாசாரம். எங்கு பார்த்தாலும் கஞ்சா, கஞ்சா இல்லாத தெருவே இல்லை. அனைத்து பள்ளி- கல்லூரிகளின் வாசல்களிலும் போதைப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது.
கஞ்சா போதையால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது. 2 வயது பெண் குழந்தை முதல் 80 வயது கிழவி வரை பாதுகாப்பு இல்லை. சட்டம்- ஒழுங்கும் சரியில்லை.
தமிழகத்திலே போதைப் பொருள் நடமாட்டம்!
இருக்கிறது என்பதை பற்றி பேசாதீர்கள், விவாதிக்காதீர்கள் என்று உள்துறை செயலாளர் பேட்டி கொடுக்கிறார்.
இப்படிப்பட்டவரை வைத்துக் கொண்டு எப்படி
தமிழகத்திலே. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முடியும்? தேர்தலை எப்படி நியாயமாக நடத்த முடியும்? இப்படி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது
உள்துறை செயலாளரை மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்முடைய நோக்கம். லட்சியம், ஸ்டாலின் அரசு தூக்கியெறியப்படவேண்டும். இந்த ஆட்சியின் தவறுகளையும், குறைகளையும் மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். தி.மு.க. ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிக்கை!
இல்லாததால்தான் ரூ.5 ஆயிரம் கொடுக்கிறார்கள், மக்களை திட்டமிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கும்.
தி.மு.க.அரசுக்கு இந்த தேர்தலில்
சரியான பாடம் புகட்ட வேண்டும். அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு நல்லது, தமிழ் நாடு வளர்ச்சிக்கும் நல்லது. மத்திய அரசாங்கம் துணையிருந்தால் தமிழகத்திற்கு தேவையான அனைத்து
திட்டங்களையும் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் அ.தி.மு.க. நகர செயலாளர்கள். பசுபதி, ராமதாஸ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்.
அற்புதவேல், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள். பாலசுந்தரம், சங்கர், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் முத்தையன், ஒன்றிய செயலாளர்கள். சுரேஷ்பாபு, ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர். சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்.
இளைஞரணி தலைவர். பிரஸ்குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர். ரகுநாதன், முன்னாள் அரசு வக்கில். ராதிகா
செந்தில், பா.ம.க. மாவட்ட தலைவர். தங்கஜோதி, அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர். கணபதி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் தலை. வேல்ராஜன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர். தமிழரசன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக